BREAKING NEWS

Feb 14, 2014

மஹரமின்றி ஆண் மருத்துவர்களை பார்க்கக் கூடாது: சவுதி உலமா !


பெண்கள் தகுந்த மஹரமின்றி ஆண் மருத்துவர்களை பார்ப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லையெனவும் அவ்வாறு பெண்கள் தனியாக செல்வது அதிகரித்து வருவதனால் இது தடுக்கப்படவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார் சவுதி உலமா சபை உறுப்பினரான பிரபல உலமா ஷேய்க் அல் கயால் அல் முபாரக்.

மருத்துவ பரிசோதனைகளின் என்பது மறைக்கப்பட வேண்டிய உடலுறுப்புகளையும் காட்டக்கூடிய சூழ்நிலையை உள்ளடக்கியது என தெரிவித்துள்ள அவர், அவசர சூழ்நிலையாக இருந்தாலன்றி இவ்வாறான விடயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியில்லெயென தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார நிலையமொன்றில் மஹரமின்றி ஆண் மருத்துவர்களைப் பார்வையிட வந்த பெண்கள் குழுவொன்றை சவுதி காவல்துறையின் முதாவா பிரிவு திருப்பியனுப்பிய சம்பவமொன்றையும் அல் ஹயாத் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &