பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளி வாயலில் இன்று காலை 9.00 மணியளவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலின் நாடுபூராவும் ஆரம்பிக்கப்படுகின்ற மக்தப் இஸ்லாமிய போதனை வகுப்புக்கள் உத்தியோக பூர்வமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கண்டி மற்றும் குருநாகல் கிளை பிரதிநிதிகளின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
முற்றாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்து வருட பாடனெரியான இதனை முற்றாக பூர்த்திசெய்யும் அனைவருக்கும் இன்ஷா அல்லாஹ் அரபு மொழி பரீட்சயமவதுடன் முழுக் குரானையும் சரளமாக தஜ்வீத் முறைப்படி ஓத முடியுமாவதுடன் ஒருமனிதன் அன்றாட வாழ்க்கையில் தெரிந்திருக்கவேண்டிய சகல துஆக்கள் முக்கிய ஹதீஸ்கள் உட்பட சாதாரண மனிதன் அறியவேண்டிய சகல இஸ்லாமிய விடயங்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
ஆண் மாணவர்களுக்கான அனுமதி வயது 5-10 வதுடன் பெண் மாணவர்களுக்கான அனுமதி வயது 5-10 ஆகும்
மாஷா அல்லாஹ் இன்று ஆரம்பமான இவ்வகுப்புக்களுக்கு 105 மாணவ மாணவிகள் பதிவுசெய்து வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.