BREAKING NEWS

Feb 25, 2014

ஸதகா மூலமாக அல்லாஹ் செய்த மாபெரும் கிருபை.

இரத்தத்தில் கேன்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் ரியாத் மாநகருக்கு அருகில் இருக்கும் ஹுரைமலா எனும் பிரதேச பெண் ஒருவர் தனது வீட்டுக்கு இந்துனேசியாவில் இருந்து பணிப் பெண் ஒருவளை வேலைக்காக எடுத்தாள். 

குறித்த  இந்துனேசியப் பணிப் பெண் கழிப்பறைக்கு சென்றால் தினமும் தாமதிப்பதை அவதானித்த வீட்டு எஜமானி காரணத்தை வினவிய போது தான் பெற்றெடுத்து 20 நாட்கள் மட்டும் கலிந்த சிசுவை விட்டு விட்டு இங்கு வந்ததாகவும் அந்த பிள்ளையின் பால் சுரக்கின்ற போது வேதனை தாங்க முடியாமல் கழிப்பறையில் சென்று அதனை வெளியேற்றுவதாகவும் கண்ணீர் மழ்க விடயத்தை சொன்னாள். 

இதனை கேட்ட வீட்டு எஜமானி உடனே  வீட்டுப் பணிப் பெண் இந்துனேசியாவுக்குச் செல்வதற்கான விமானத்தை ஏற்பாடு செய்து 2 வருடங்களுக்கான ஊதியத்தையும் வழங்கி 2 வருடங்களின் பின் விரும்பினால் இந்த வீட்டுக்கே வருமாறு தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து அனுப்பினாள் அந்த சவுதி எஜமானி. 

நாற்கள் உருண்டொட வீட்டு எஜமானி தனது கேன்சர் நோய்க்காக மருத்துவமனைக்குச் சென்றாள். அந்தோ அதிர்ச்சி சுப்ஹானல்லாஹ் தனக்கு இருந்த அந்த கேன்சரின் அளவு குறைந்து இருந்தது. மருத்துவர்கள் மூக்கில் விரலை வைத்து யோசிக்கலானார்கள். மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து பார்களானார்கள் ஆனால் முடிவு எந்த ஒரு நோயும் கிடையாது என்று வந்தது. இது அல்லாஹ் அந்த எஜமானிக்கு செய்த மாபெரும் கிருபை. அல்லாஹ்வின் அடிமைக்கு இரக்கம் காட்டியதால் அல்லாஹ் இப் பெண்ணுக்கு இரக்கம் காட்டினான்.

இச் செய்தி நபி (ஸல்) அவர்களின் தீர்க்க தரிசனத்தை எமக்கு நினைவூட்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் ஸதகா (உங்கள் செல்வத்தில் இருந்து தேவையுள்ளோருக்கு கொடுப்பது) மூலமாக உங்களுக்கு வர இருக்கும் துன்பங்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

எனவே அல்லாஹ்வின் பாதையில் அதிகம் செலவழிப்பதன் மூலமாக எமக்கு வர இருக்கும் துன்பங்களை மற்றும் நோய்களை போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

தகவல் மற்றும் மொழியாக்கம்: அபூ தர்வேஷ்
-


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &