இவ்வாண்டு பிரேசிலில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பத்து இலட்சம் அல்குர்ஆன் மொழி பெயர்பு பிரதிகள் மற்றும் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பயனுள்ள புத்தகங்களை விணியோகிப்பதற்கு பாரிய திட்டம் ஒன்று இடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....
பிரேசிலில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் கூட்டமைப்பும் குவைத் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் 'இஹ்யாவு துராஸில் இஸ்லாமிய்யா' அமைப்பும் மேற்படி திட்டத்தை செய்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அன்பின் சகோதரர்களே அல்லாஹ் வின் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல எந்த இடம் கிடைத்தாலும் அது விளையாட்டு மைதானமாக இருந்தாலும் அதனை பயன் படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் என்ற வகையிலில் எமது கடமையாகும்.
இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் இத்திட்டத்தை மாற்று மதத்தவர்களை இஸ்லாத்திற்குல் எடுப்பதற்காக வழுக்கட்டாயப்படுத்தும் திட்டம் என்று இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும் போக்கு மாத சார்புள்ள அமைப்புக்கள் தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது. உங்களது மதம் சத்தியமாக இருந்தால் நீங்களும் இத்திட்டங்களை அமுழ்படுத்துங்கள்.
ஆனால் இவ்வுலகைப் படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விடம் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்று மாத்திரமே....
அல்லாஹு அக்பர்.....
தகவல்; அபூ தர்வேஷ் - பறகஹதெனிய