கண்டியிலுள்ள ஒரு பொது வரவேற்பு மண்டபம் (ஜின்னா ஞாபகார்த்த மண்டபம்) தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக 15 பேர் விசாரணைக்கா கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிட்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
கண்டி நகரில் பிரதான வீதியொன்றில் அமைந்துள்ள அம்மண்டபம் பல்வேறு பொதுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரு கோஷ்டி களுக்கிடையிலான இத்தாக்குதல் சம்பவம் நேற்று(18) இடம் பெற்றிருந்தது.
வரவேற்பு மண்டபத்தின் உரிமை தொடர்பாகவே இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நீதி மன்ற விசாரணை ஒன்று இருப்பதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.
மேற்படி வரவேற்பு மண்டபத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அதில் பொருத்தப்பட்டடிருந்த கண்ணாடிகள் பலவும் உடைக்கப் பட்டுமுள்ளன.