BREAKING NEWS

Feb 13, 2014

அதிவேக நெடுஞ் சாலை பஸ் வண்டியில் தீ


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் வண்டியொன்று இன்று வியாழக்கிழமை தீப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) பகல் 12 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க அதிவேக வீதி நிருவாக பணிப்பாளர் டி.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தீயினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &