BREAKING NEWS

Jan 21, 2014

மலிங்க, மென்டிஸ் பிக் பாஷிலிருந்து திருப்பி அழைப்பு

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றிவந்த இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களான லசித் மலிங்க, அஜந்த மென்டிஸ் இருவரையும் இலங்கை கிரிக்கெட் சபை திருப்பி அழைத்துள்ளது.

லசித் மலிங்க மெல்பேர்ண் ஸ்ரார்ஸ் அணி சார்பாகவும் அஜந்த டென்டிஸ் சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாகவும் பிக் பாஷ் லீக் போட்டிகளில் பங்குபற்றி வந்தனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, தேசிய அணிக்கான குழாமிலுள்ள அனைத்து வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் அடுத்த சில வாரங்களுக்கு உட்பட வேண்டுமென உணர்ந்ததாகவும் அதன் காரணமாகவே இருவரையும் திருப்பி அழைத்ததாகவும் தெரிவித்தார்.

அஜந்த மென்டிஸ், லசித் மலிங்க இருவரையும் திருப்பி அழைக்கும் முடிவும் பயிற்றுவிப்பாளர்களினதும் தேசிய தேர்வாளர்களினதும் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டதாகவும் நிஷாந்த ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

லசித் மலிங்கவிற்கு பாரதூரமான உடல் தகுதிப் பிரச்சினைகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த இலங்கையின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, ஆனால் உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தி கடினமான உழைப்பை மேற்கொள்ள லசித் மலிங்க தயாராக இருந்தால், இலங்கைக்காக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தயாராக இருந்தால் அவர் இலங்கை அணிக்காகத் தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &