BREAKING NEWS

Jan 21, 2014

மகளுக்காக வாடகை தாயான பெண்

பெண்ணொருவர் தனது மகளுக்காக வாடகை தாயாக மாறிய விசித்திர சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தற்போது அவர் 8 மாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் வசிக்கும் ஜூலியா நவோரா (வயது 58) என்ற பெண்ணே இவ்வாறு வாடகை தாயாக மாறியுள்ளார்.

ஜூலியாவுக்கு லோரினோ மெக்கினான் என்ற மகளொருவர் உள்ளார். பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வைத்தியர்கள்; அறிவுறுத்தினர்.

இந்நிலையில், லோரினோவுக்காக அவரது தாயார் ஜூலியா நவோரா வாடகைத் தாயாகியுள்ளார்.

58 வயதாகும் ஜூலியாவுக்கு மாத விலக்கு நின்று 12 ஆண்டுகள் ஆகின்றன. எனவே அவருக்கு 3 மாதங்களாக ஹோர்மோன் ஊசிகள் போடப்பட்டு மகள் லோரினாவின் கருமுட்டைகளும் செலுத்தப்பட்டன. முதல் முயற்சியிலேயே ஜூலியா கருதரித்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

குழந்தை மீதான ஆசையில் கர்ப்ப காலத்தில் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தனது தாய்க்கு மகள் லோரினோ அடிக்கடி பெரிய பட்டியலை வாசித்துக் காட்டி வருகிறார். அதற்கு அவரது தாய், 'நான் ஏற்கெனவே 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தவள். என்னுடைய பேரக் குழந்தையையும் ஆரோக்கியமாக பெற்றெடுப்பேன்' என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &