கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த 09 வயது மாணவர் ஒருவர் அந்தப் பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட புல் வெட்டும் இயந்திரத்தால் சுவருடன் சேர்த்து நெரிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவெலத்த பிரதேசத்தைச் சேர்ந்த சினித் விஜேசிங்ஹ என்ற மாணவர் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, இவர் மரணமடைந்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Jan 21, 2014
புல் வெட்டும் இயந்திரத்தில் நெரிபட்டு மாணவன் பலி
Posted by AliffAlerts on 13:11 in NL | Comments : 0