FA கிண்ண கால்பந்தாட்டப் போட்டித்தொடரின் இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் பங்குபற்றிய முதலாவது பொட்டில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தை 2 - 1 எனும் அடிப்படையில் வீழ்த்தி 4 வருடங்களின் பின்னர் பங்குபற்றிய தமது முதலாவது FA கிண்ண தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துகொண்டது.
இன்று மாவத்தகம சாமோதைய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணியினர் முகல் கோளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது முதல் கோலைப் பெற்ற மூன்றாவது நிமிடத்திலே இலவன் ஸ்டார்ஸ் கோஅல் காப்பாளரின் முறையற்ற பிடி முயற்சியால் பெனால்டி ஒன்று நியூ ஸ்டார்ஸ் அணியினருக்கு கிடைக்கப்ப்ற்றும் அதனை அவர்கள் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது
அதனைத் தொடர்ந்து இலவன் ஸ்டார்ஸ் அணியினர் கிடைக்கப்பெற்ற பல சந்தர்ப்பங்களை தவறவிட்டாலும் முதல்ப் பகுதி நிறைவுறும்போது இலவன் ஸ்டார்ஸ் அணி வீரர் நசீபிfன் சிறந்த ஆட்டத் திறமையினால் 15 நிமிடங்களுக்குள் 2 கோள்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தமை விசேட அம்சமாகும்.
இரண்டாவது பகுதியிலே இரு அணிகளும் திறமையாக விளையாடினாலும் எவ்வித கோள்களையும் பெற முடியவில்லை. குறிப்பாக இலவன் ஸ்டார்ஸ் அணியினர் மிகவும் இலகுவாக பெறக்கூடிய சுமார் 7 கோள்களை அநியாயமாக தவறவிட்டனர்.
அத்துடன் போட்டி நிறைவுற சுமார் 5 நிமிடங்கள் இருக்கையில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணியின் தலைவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலவன் ஸ்டார்ஸ் அணியினரின் அடுத்த போட்டி திருகோணமலை பாத்திமா விளையாட்டுக் கழகத்துடன் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் இடம்பெறவிருக்கின்றது.








