BREAKING NEWS

Nov 10, 2013

நுகவல மத்திய கல்லூரி மாணவர்கள் பிணையில் விடுதலை

கண்டி நுகவல மத்திய கல்லூரி மாணவனைத்தாக்கிய சக மாணவர்கள் நால்வருக்கு தலா 25 000 ரூபா வீதம் ஒரு இலட்ச ரூபா பிணை வழங்கப்பட்டது. 
கண்டி நுகவெல மத்திய கல்ல}ரியின் 11 ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய அப் பாடசாலையை சேர்ந்த அதே வகுப்பில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் (10.11.2013) கைது செய்துள்ளனர்.
பாடசாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்று காரணமாக பாடசாலை நேரத்தின் பின் இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளதுடன் காயமடைந்த மாணவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு மாணவர்களையும் கட்டுகாஸ்தோட்டை பொலீஸார் கைது செய்து கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்த போது தலா 25 000 ம் ரூபா வீதத்தில் சரீரப்பிணையில் விடுதலை செய்தார். 
- MN

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &