BREAKING NEWS

Nov 9, 2013

இவரை தெரியுமா? INFORM TO POLICE SOON

நாடு ழுமுவதும் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்த பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான உதவி​யை பொலிஸார் பொதுமக்களிடம் நாடியுள்ளனர்.

இதன்படி சுமார் ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டாயிரம் ரூபா நணயத்தாளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட பிரதான சந்தேகநபர் பற்றிய தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நபர் 973/16, பொதராவ வீதி, மாலம்பே என்ற முகவரியிலுள்ள வீட்டின் உரிமையாளரான ´கம்மல்கொட லியனகே பண்துல குமார´ என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர் குறித்த தகவல்களை பொதுமக்கள் 01124221760112326670 மற்றும் 0112320141-5 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும்.

இதேவேளை 0112380380  என்ற தொலைநகல் இலங்கங்களுக்கும் தகவல்களை வழங்க முடியும் என குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரின் புகைப்படம் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்நபரை காணும் அல்லது இந்த சந்தேகநபர் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் பொலிஸாருக்கு வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &