
குருநாகல் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் குருநாகல் மாவட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது.
அந்தவகையில் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கான முதற் போட்டி நாளை புதன்கிழமை குருநாகல் யூத் அணியினருடன் குருநாகல் வெஹெர மைதானத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறவிருக்கின்றது.
நடப்பு சம்பியனான பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன போட்டித் தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றிவாகையின் ஆளுமையுடன் நாளைய போட்டியில் களமிறங்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களுள் சிலர் நாளைய போட்டியில் கலந்துகொள்வார்களா என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும்.
எனினும் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழக அணியினருக்கு தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொடர்ந்தும் குருநாகல் மாவட்ட சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள எமது வாழ்த்துக்கள்