"நாங்கள் சிறுவர்கள்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு, பெரியமுல்லை ரஷாத் மண்டபத்தில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு அஷ்ஷெய்க்; அப்துல் ஹசன் அலி நத்வி உஸ் இஸ்லாமிக் நிறுவனத்தின் தலைவர் அல் ஹாபிஸ் முப்தி அப்துல்லா ஹரிஸ் (அஸ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சபீர் முஹ்சினால் நூல் விமர்சனமும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் எம்.எச்.பஸ்லுல் ஹக்கினால் பதிலுரையும் மேற்கொள்ளப்பட்டது.
நீர்கொழும்பு அஷ்ஷெய்க் அப்துல் ஹசன் அலி நத்வி உஸ் இஸ்லாமிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் உலமாக்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கிளவர் பவுண்டேசனினால் வெளியிடப்பட்ட நாங்கள் சிறுவர்கள் எனும் நூலினை எப்.எச்.எ.பத்தாஹ், எப்.எச்.பஹ்மான் மற்றும் எப்.எச்.பாஹீஹ் ஆகியோர் இணைந்து இந்த நூலினை எழுதியுள்ளனர்.
இந்த புத்தகம் கொழும்பு பல்கலைக்கழக உன்னாட்டு மருத்துவ நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் எம்.எச்.பஸ்லுல் ஹக்கின் புதல்வர்களினால் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.