அரண்மனை படம் எனக்கு ஒரு சவால் என்கிறார் ஹன்சிகா மோத்வானி.
சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்த ஹன்சிகா மீண்டும் அவர் இயக்கும் அரண்மனை படத்தில் நடிக்கிறார்.
இதில் ஹன்சிகாவை தவிர லட்சுமி ராய், ஆன்ட்ரியா ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
திகில் படமாக உருவாகும் இதில் நடித்தபோது ஹன்சிகா பயத்தில் நடுங்கினாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
முதன்முறையாக எனக்கு பயம் தொற்றிக்கொண்டது.
இதற்குமுன் நான் ஏற்று நடித்த வேடங்களுக்காக இதுபோல் நடுங்கியது கிடையாது.
மேலும் இந்தப் படம் எனக்கு சவாலானது என்றும் இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை.
இந்நிலையில், இப்படத்தில் அவர் பேயாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.