BREAKING NEWS

Oct 13, 2013

ஜில்லா கதை வெளியாகியது ?


ஜில்லா படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாகவும், மோகன்லால் தாதாவாகவும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா.

துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.

படத்தில் மோகன்லால் தாதாவாக நடிக்கிறார், அவரது மகனாக வரும் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.

படத்தின் முதல்பாதி காதல், கொமடி என்று கலகலவென இருக்க இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &