பொது நலவாய நாடுகள் மாநாடு ஆரம்பமாகும் நவம்பர் 15 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு நவம்பர் 15 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு தாமரை தடாக (நெலும் பொகுன) கலை அரங்கில் ஆரம்பமாகும். ஆரம்ப தின நிகழ்வுகளை முன்னிட்டு தாமரைத் தடாக கலை அரங்கத்துக்கு அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டிருக்கும்.
இதேவேளை 15,16 ஆம் திகதிகளில் கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்படுமெனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.