வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜீ.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
13 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்குரிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 65 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.