இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் க்ஷ்னிகா ஹிரும்புரேகம தெரிவித்தார்.
2012ம் ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் தகுதி உடைய மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 24,000ற்கும் அதிகமான மாணவர்களை உள்வாங்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்ட பின் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என க்ஷ்னிகா ஹிரும்புரேகம குறிப்பிட்டார்.
Sep 8, 2013
2012 A/L Z-SCORE எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில்
Posted by AliffAlerts on 10:00 in NL | Comments : 0