சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லேபர் கட்சி தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் டோனி அபட் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு 07-09-2013 நடைபெற்றது. மொத்தம் உள்ள 150 தொகுதிகளில் 76 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும். வாக்குப் பதிவு முடிந்த பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி வருகின்றன.
இதனால் ஆஸ்திரேலியாவில் தற்போதைய பிரதமர் கெவின் ரட் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் 6 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக லிபரல் கட்சித் தலைவரான டோனி அபட் தேர்ந்தெடுக்கப்படக் கூடும்.