BREAKING NEWS

Sep 4, 2013

சவுதியைச் சேர்ந்த அதிக எடையுடைய நபர் காலமானார்

380 கிலோ எடையுடைய அஜீத் அல் தௌசாரி என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை வபாத்தாகியுள்ளார்.

26 வயதுடைய இவர் கடுமையான நிமோனியா (pneumonia) என்ற நோயின் காரணமாக அதிக எடை உடையவாராக இருந்தார். இவருடைய எடை 380 கிலோ கிராமாகும். இதனையொட்டி கொழுப்பை குறைப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03-09-2013) காலமானார்.

சவுதி, தமாமில் ஒரு சிறு கிராமத்தில் வசித்த இவர் சவுதி அரேபிய நாட்டு மன்னர் அப்துள்ளாஹ் அவர்களின் உத்தரவின் பின் அவரை மேலதிக சிகிச்சைக்காக தம்மாம் பாதுகாப்பு படை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

”அவர் கடுமையான நிமோனியா (Acute Pneumonia) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மூச்சு விடுவதற்கும் அவதிப்பட்டார். அவரது இதயம் செயலிழந்துவிட்டது, எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்” என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &