விளம்பர ஒப்பந்தத்தை மீறிய காரணத்துக்காக, இந்திய அணியின் விராத் கோஹ்லி மீது தனியார் நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
பாதணிகள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்றே கர்நாடக உயர் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
விராட் கோஹ்லி குறித்த நிறுவனத்துடன் கடந்த 2007 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2007 டிசம்பர் மாதம் வரை என ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். பின்னர் அது 2008 ஆகஸ்ட் 1 முதல் 2013, ஜூலை 31 வரை புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதேவேளை சில நிபந்தனைகள் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை அடுத்த வருடம் ஜூலை 31 வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து, கோஹ்லி கடந்த ஜூன் மாதம் குறித்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை நீடித்துகொள்ள விரும்பவில்லை என கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
இந்நிலையிலேயே கோஹ்லியின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த குறித்த நிறுவனம் நீதிமன்றிவ் வழக்கு தொடர்ந்துள்ளது. காரணமில்லாமல் ஒப்பந்தத்தை முன்னதாக முடித்துக் கொள்வது என்ற கோஹ்லியில் முடிவு ஒருதலைப்பட்சமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் ஒப்பந்த விதிகளை மீறியுள்ளார். இந்த காலம் முடியும் வரை, அவர் எந்த மற்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்ய அனுமதிக்க கூடாது என மனுவில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து விசாரணையை மேற்கொண்ட நீதிபதி " ஒப்பந்தம் குறித்து விளக்கம் தருமாறு' கோஹ்லிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.