இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J. புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.
இதன்பொருட்டு இரண்டாயிரத்து 836 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பரீட்சை நடைபெறும் வளாகத்திற்குள் பெற்றோர் மற்றும் அனுமதியற்றவர்கள் பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.