BREAKING NEWS

Aug 29, 2013

கட்டாரில் இலங்கை இளைஞருக்கு பாராட்டு

கட்டார் நாட்டிலுள்ள வர்த்தக நிலைய கட்டடத் தொகுதி ஒன்றிலுள்ள வாகன தரிப்பிடத்தில் கண்டெடுத்த 90 ஆயிரம் கட்டார் ரியால் (33 லட்சம் ரூபா) பணத்தை பொலிஸில் ஒப்படைத்த இலங்கை இளைஞரின் நேர்மையை கட்டார் பொலிஸார் பாராட்டியுள்ளனர். மொஹமட் நிப்ராஸ் என்ற இந்த இலங்கை இளைஞரின் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இலங்கையில் வீடொன்றை கொள்வனவு செய்யக் கூடிய பெரும் தொகை பணத்தை உரியவிடம் கொடுத்தமை குறித்து அங்குள்ள இலங்கையர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.-TC

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &