சவூதி அரேபியா அல் கசீம் இலங்கை நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வூ நேற்று வெள்ளிக்கிழமை (02-08-2013) புரைதா - ஹுவைலானில் (இஸ்திராஹா)வில் இடம்பெற்றது.
அதில் சங்கத்தின் நிர்வாகத்தினர்கள் உற்பட அல்கசீமில் தொழில் புரியக்கூடிய 150 க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். இஸ்லாம் அல்லாத மாற்றுமத நண்பர்களும் கலந்து கொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
அத்தோடு இந்நிகழ்வில் மௌலவி சகீன் (இஹ்ஸானி) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியில் சங்கத்தின் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.நவாஸ் (மதனி) அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவியவர்களுக்கும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகம் சார்பாக நன்றியைத்தெரிவித்தார்.
தகவல். Asst. Secretary: Riyas Mohd Nafee