சென்ற முறைப்போல் இம்முறையும் பெருநாள் தொழுகை திடலில் தொழ எடுத்த முயற்சியை ஒரு சிலரது எதிர்ப்பின் காரணத்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து சுதந்திரமாகவும், நீதியாகவும் தமது கடமைகளை செய்ய விடாது ஒரு சிலர் மேற்கொண்ட அநாகரீகமான நடத்தைகளாலும்,அச்சுறுத்தல்களாலும் மனமுடைந்த மஸ்ஜிதுல் அஸ்ஹர் நிருவாகம் இன்று ஜும்ஆவின் பின்பு கேட்டு விலகிக்கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் ஒருவர் அறியத்தந்தார்.
ஒரு சிலர் இந்த புனித ரமலானையும் பொருட்படுத்தாது அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், நிர்வாக சபைக்கு அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டதை தொடர்ந்து சிறு தகாராறு ஏற்பட்டதுடன் இறுதியில் அல்லாஹ்வுக்காக எதிர் தரப்பிடம் நிர்வாக பொறுப்பை கையளித்ததாக எமக்கு மேலும் தெரிய வருகின்றது.
இதுவரை காலமும் சிறந்த முறையில் பள்ளியை நிர்வாகித்து வந்த சபையினரிடம் இருந்து நிர்வாக பொறுப்பு பலவந்தமாக பறிக்கப்பட்திருந்தாலும், "இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டம், கையளித்த அல்லாஹ் உனது மாளிகையை சிறந்த முறையில் நிர்வாகிக்கப்பட நீயே அவர்களுக்கு உதவி செய்" என முந்தைய நிர்வாகத்தினர் பிரார்த்தனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.