BREAKING NEWS

Aug 16, 2013

பள்ளிவாயல் பதாகை சம்பந்தமாக பரப்பப்படும் போலியான தகவல்கள்

பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாயல்களின் எதிரே 1934ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இடப்பட்டுள்ள பதாகை "SILENCE PLEASE MOSQUE AHEAD" சம்பந்தமாக பௌத்த தீவரவாத அமைப்பான பொது பலசேனாவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அந்தவகையில் அண்மையில் குருநாகல் நகரில் இடம்பெற்ற பொது பலசேனா கூட்டத்தின்போது இதனை அவர்கள் அகற்றாவிடின் தாம் அதனை அகற்றுவதாகவூம் பாதுகாப்புப் பிரிவினரையூம் நாட்டின் சட்டத்தையூம் மதிப்பவர்களாக தாம் பொலிசாருக்கு இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தற்கு அமைய கூட்டத்துக்கு அடுத்த தினம் இப் பதாகையை நீக்க ஒரு கூட்டம் வந்தாலும் அதனை நிறைவேற்ற முடியாமல் போனமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

தற்போது அது சம்பந்தமாக பல போலியான தகவல்கள் வலைதளங்களில் பதியப்பட்டு வருகின்றன.

போலியான தகவல்.
பல வலைதளங்களில் இப் பதாகையை அகற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவூ வழங்கப்பட்டிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வாறு 14 தினங்களுக்குள் இப்பதாகையை அகற்றி அதுபற்றி மஜஸ்ட்ரேட்டுக்கு (Magistrate) தகவல் கொடுக்கவேண்டும் எனவூம் மேற்படி வலைதளங்களில் போலியான தகவல் வெளியிடப்பட்டிருக்கின்ரது.

எனவே இவ்வாறு போலியான தகல்களை நம்பாதீர்கள் என பொதுமக்களை வேண்டிக்கொள்ளப்படுகின்ரனர்.

இது பற்றிய உண்மையான தகவல்கள்.
  • மாவத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிலெஸ்ஸ மஜிஸ்ரேத் நீதிமன்றத்தில் இப்பதாகையை நீக்குவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்காக வழக்கு பதிவூசெய்துள்ளார். இதற்கமைவாக நேற்றைய தினம்  இதுபற்றிய விசாரனைகளுக்காக பறகஹதெனிய பெரிய பள்ளிவாயலுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றில் 14 தினங்களுக்குள் ஆஜராகுமாறு  அழைப்பானை விடுக்கப்பட்டது.
  • வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின் படி இது வரையில் அவர்களுக்கு எவ்வித அழைப்பாணையூம் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
  • இப்பதாகையானது, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளுக்கு இணைவாக இருப்பதால் இதனை அகற்றவேண்டிய தேவை இல்லை. என்பதே வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கருத்தாகும்.
  • அத்துடன் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்ட தகவல் பிழையென்பதால் அவ்வழைப்பாணை திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றது.
வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்ற போலியான தகவல்கள் :

பெலஸ்ஸ மாஜிஸ்ட்ரேட் நாமல் பெரேராவினால் பரகஹதெனிய பள்ளிவாயலின் முன்பாக போடப்பட்டுள்ள 'அமைதியைப் பேணவும்' பதாகையை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு பள்ளிவாயல் இமாம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதேவளை அப்பதாகையை சேதப்படுத்திய முஸ்லிம் ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு.


Pelassa Magistrate Namal Perera ordered the Moulavi of the Paragahadeniya Grand Mosque in Mawathagama and the Road Development Authority yesterday, to remove the sign board erected in front of the Mawathagama Paragahadeniya Mosque, which reads, ‘Mosque ahead- keep silence’, within 14 days.

The magistrate also ordered that, after removal of the notice, the matter be reported to the magistrates’ court. His order follows a complaint made to court by the Mawathagama Police.

The OIC of the Mawathagama Police Station, Inspector Deshabandu Senaratne pleaded from court that the notice be removed on an order under number 98 of police regulations, in order to avoid an uprising of the Sinhala Buddhists of the area.

Meanwhile, a suspect named Mohamed Hassim Samsudeen, described as a teacher attached to Theliyagonna Hisbullah Central College, Kurunegala who had been arrested for allegedly damaging the notice board was ordered by the magistrate to be remanded until August 21

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &