BREAKING NEWS

Jul 25, 2013

வட மாகாண சபை தேர்தலில் TNA சார்பாக முஸ்லிம் ஒருவர்

வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் ஒருவர் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
முஸ்லிம் புத்திஜீவிகள் குழுவினருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் களமிறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் மற்றும் மீள்பார்வை பத்திரகையின் ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &