BREAKING NEWS

Jul 25, 2013

இலங்கையில் புதிய நுளம்பு வர்க்கம்

பொரளை வைத்திய பரிசோதனை நிலையம் இலங்கையில் புதிய நுளம்பு வர்க்கமொன்றை கண்டுபிடித்துள்ளது. 

நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு வர்க்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். 

டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும் இடங்களில் இந்த புதிய நுளம்பு வர்க்கம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த புதிய நுளம்பு வர்க்கம் டெங்கு நுளம்பு முட்டைகளை உண்பதாக முதல்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். 

டெங்கு நுளம்பை போல் காணப்படும் இப்புதிய நுளம்பு மனித இரத்தம் உரிஞ்சுகிறதா என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

சுமார் 124 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் புதிய நுளம்பு வர்க்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கையில் இதுவரை 17 வர்க்க நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &