BREAKING NEWS

Jul 15, 2013

சிரிய ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் தலிபான்கள்

சிரியா ஜனாதிபதிக்கு எதிராக போராட பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தலிபான் வட்டாரங்கள் கூறுகையில், எங்கள் நபர்கள்(பயங்கரவாதிகள்) சிரியா சென்று ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைகளை எதிர்த்து போராடுவார்கள்.

முதற்கட்டமாக, கொரில்லா போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் அங்கு செல்வார்கள்.

பாகிஸ்தானில் இருந்து சிரியா செல்பவர்களில் அரபு, உஸ்பெக், செசன் தீவிரவாதிகளும் அடங்குவர்.

அவர்கள் ஆப்கானில் 2001ஆம் ஆண்டு அமெரிக்கா படையெடுப்பு நடத்தியதில் இருந்து, பாகிஸ்தானின் மலைப்பாங்கான பழங்குடியினப் பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &