BREAKING NEWS

Jul 15, 2013

முர்சியின் விடுதலையை எதிர்நோக்கும் ஜேர்மனி

எகிப்து ஜனாதிபதி முகம்மது முர்சியின் இருப்பிடம் குறித்தான கட்டுப்பாட்டுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி உறுப்பினரான முர்சி பாதுகாப்பான இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அவர் எவ்வித பிரச்சனைக்காகவும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் இராணுவ மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் அவர் இறுதியில் குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளன.

மேலும் ஜேர்மனியின் நம்பக நிறுவனமான செஞ்சிலுவை சர்வதேச குழுவானது மோரியை அனுகுவதற்கு அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில் தலைவர் முர்சி மீண்டும் வரும் வரை ஆர்ப்பாட்டங்களில் வன்முறையை தவிர்க்க வேண்டும் என்று முஸ்லிம் சகோதரத்துவ குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி செய்தி தொடர்பாளர் மேலும் கூறுகையில், எங்களுக்கும் எமது உறுப்பினர்களுக்கும் எகிப்தில் நிறைவேற்றப்பட்ட நீதி தொடர்பாக கருத்து உள்ளது. எகிப்தில் அரசியல் அடக்குமுறை என்பது இருக்க வேண்டும்.

ஆனால் அரசியல் அடக்குமுறை மட்டும் எங்கள் கொள்கையல்ல அந்த அரசியல் அடக்குமுறையால் எகிப்து நாட்டிற்கு எந்த பின் விளைவுகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

மேலும் எகிப்து நாட்டில் ஜனநாயகம் மீண்டும் வந்தால் அனைத்து அரசியல் சக்திகளும் ஜனநாயக மாற்றத்தில் பங்கேற்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &