நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ஜயரத்ன தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் பற்றாக்குறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அதிபர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை பாடசாலை அதிபர்களினால் மேற்கொள்ளப்படும் லஞ்ச ஊழல் மோசடி குறித்து விசாரணை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கோட்டபாய ஜயரத்ன குறிப்பிட்டார்.
பண மோசடி உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பல பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்டடுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது அதிபர்கள் குற்றவாளிகள் என இனங்காணும் பட்சத்தில் அவர்கள் தமது பதவிகளை இழக்க நேரிடும் என கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ஜயரத்ன குறிப்பிட்டார்.