BREAKING NEWS

Jul 15, 2013

அரசு எதிர்க்கட்சி இணைந்து செயற் படுகின்றன: பொன்சேகா

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதாக ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பும் தமக்கு ஆதரவான தரப்பினருக்கு மட்டுமே சலுகைகளை வழங்குகின்றன.

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமோ திட்டமோ கிடையாது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். சிறையில் அடைத்த காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு, தேர்தலில் வெற்றியீட்டுவேன்.

கஸ்டப்படும் மக்களுக்காக குரல் எழுப்புவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &