இந்தியாவின் அழைப்புக்கு பதில் வழங்காத இலங்கை, பாகிஸ்தானுடன் அணுவாயுத உடன்படிக்கையை செய்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையுடன் அணுப்பரம்பல் தொடர்பான உடன்படிக்கை ஒன்று குறித்து இந்தியா ஏற்கனவே இலங்கையுடன் கடந்த வருடம் பேச்சு நடத்தியது.
இது தொடர்பில் இலங்கைக்கு எழுத்துமூலமான வரைபையும் இந்தியா அனுப்பியது.
எனினும் அதற்கு இதுவரை பதில் வழங்காத இலங்கை, பாகிஸ்தானுடன் அணுவாயுத உடன்படிக்கை ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையை அடுத்தே இலங்கை இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.