BREAKING NEWS

Jul 24, 2013

அச்சுப் பிழைகளுடன் வினாத்தாள்; அதிகாரிகளின் கவனயீனமே காரணம்



பிலியந்தலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அச்சுப் பிழைகளுடன் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்பட்டமைக்கு அதிகாரிகளின் கவனயீனமே காரணம் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் S.D.கொடிகார தெரிவித்தார்.
இந்த விசாரணைகளுக்கு அமைய, குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கி பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
பிலியந்தலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அச்சுப் பிழைகளுடனான வினாத்தாள்கள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தன. அவை பத்தாம் தர மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிமனையின் ஊடாக அச்சிட்டு வழங்கப்பட்டிருந்தன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &