BREAKING NEWS

Jul 24, 2013

ஆனையிரவில் புதிய ரயில் நிலையம்

ஆனையிரவில் புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

வட மாகாணம் உள்ளிட்ட 9 மாகாண பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து திரட்டப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதியில் இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

23 வருடங்களின் முன்னர் ஆனையிரவு ரயில் நிலையம் அமைந்திருந்த இடத்திலேயே புதிய ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் ரயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &