BREAKING NEWS

Jul 24, 2013

6 UNP பிரதேச சபை உறுப்பினர்கள் அரசுடன் இணைவு

தயாசிறிக்கு ஆதரவு தெரிவித்து 6 ஐதேக பிரதேச சபை உறுப்பினர்களும் அரசுடன் இணைவு
குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ள அதேவேளை, அவருக்கு ஆதரவு தெரிவித்து பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 6 உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர். 

அதன்படி, பண்டுவஸ்நுவர பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் சமன்சிறி பீரிஸ் உள்ளிட்ட அறுவர் (நிமல் தயானந்த, ஜனக திலகசிறி, தர்ஷன சம்பத் சுரசிங்க, மனோ குமார, ஹேமந்த பல்லேவத்த) தற்சமயம் கொழும்புக்கு வந்துள்ளதுடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குச் செல்லவுள்ளனர். 

இதனால் பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் எதிர்கட்சியில் இரு ஐதேக உறுப்பினர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &