கின்னஸ் சாதனைக்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோன்பாளிகளுக்கு ‘இப்தார்’ நிகழ்ச்சி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.
ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை ஆகியவை உள்ளூர் பொலிசார் துணையுடன் ஏற்பாடு செய்த இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் 600 மீற்றர் நீள மேஜையின் மீது மனதை சுண்டி இழுக்கும் வகையில் நறுமணம் கமழும் பிரியாணி, பல்வகை கனிகள், பழச்சாறுகள் ஆகியவை பரிமாறப்பட்டன.
மாலை 5.30 மணியில் இருந்தே எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டதால் மேஜையின் முன்னே இடம் பிடிப்பதில் போட்டா போட்டி ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனையை கின்னஸ் நிறுவனம் அங்கீகரிக்குமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
