BREAKING NEWS

Jul 30, 2013

குற்றம் சுமத்து வோருக்கு எதிராக நடவடிக்கை: தயாசிறி

அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தான் கட்சி மாறுவதற்காக பணம் பெற்றுக்கொண்டதாக கூறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கபோவதாக கூறினார்.

முhகாண சபைகளின் தேர்தலுக்கு முன் அரசாங்கத்துடன் சேர்வதற்கு பல மில்லியன ரூபாவை ஊக்குவிப்பு பணமாக தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயும், நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டடோவும் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிய தயாசிறி ஜயசேகர இவர்களால் முடியுமானால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &