BREAKING NEWS

Jul 30, 2013

BBS உலமாக்களை தம்முடன் வருமாறு அழைக்கிறது

இலங்கையில் பரவலாக போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்திச் செல்லும் பெரும்புள்ளிகள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பெளத்த கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் .நாங்கள் பிரிவினை வாதம் தொடர்பாக பேசும் போது சிலருக்கு வருத்தமாக இருக்கின்றது.அப்படியான ஒருவர் கொலன்னாவை பகுதியிலும் இருக்கின்றார்.

அவர்தான் ரேனுக பெரேரா. கொலன்னாவ போன்ற பகுதியில் இப்படியான அரவாணிகள் பிறப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 13 வது அரசியலமைப்பு திருத்தில் உள்ள பாதகங்களை நாங்கள் எடுத்துக் கூறினோம்.பொதுபல சேனா என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு என்று ரேனுக பெரேரா மாத்திரம் கூறுகிறார்.

பௌத்த பிக்குவே!! விகாரைக்கு சென்று என்னவென்றாலும் செய்து கொள்ளுங்கள் வெளியில் வேண்டாம் என இந்த பகுதியில் இருக்கின்ற பெண் அரசியல்வாதி அசோகா லங்காதிலக்க கூறுகிறார்,

யுத்தத்தை விடவும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கை மக்கள் நாளுக்கு நாள் அழிந்து போவதை தவிர்க்க முடியாது.எனவே, அதில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்னை கொன்றாலும் இதை செய்வேன் . போதைபொருள் பாவனைக்கு எதிரான நடவடிக்கையில் கிறஸ்தவ காதிரினார்ளையு, உலமாக்களையும் எம்முடன் வந்து இணையுமாறு வேண்டுகோள் விடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &