எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்சீ கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜனாதிபதி மொர்சீயை இராணுவத்தினர் கடத்தியுள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மொர்சீயின் புதல்வி சாய்மா கெய்ரோவில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி பதவி கவிழ்க்கப்பட்டதனைத் தொடர்ந்து மொர்சீ இனந்தெரியாத இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரையில் அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமது தந்தை கடத்தப்பட்டமைக்கு எதிராக உள்நாட்டு சர்வதேச சட்ட உதவிகள் நாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். gtn
