மஹியங்கனை மற்றும் அதனையண்டி வாழும் பிரதேச முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு பாதுகாப்பு தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் அச்சுறுத்தபப்டுவதாகவும், இதனால் அவர்கள் பீதியடைந்துள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து முஸ்லிம் கவுன்சில் இதுகுறித்து பாதுகாப்புத் தரப்பனரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது.
இந்நிலையில் மஹியங்களை மற்றும் அதனை அண்டிய பிரதேச முஸ்லிம் முக்கியஸ்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பாதுகாப்புத் தரப்பனர் குறிப்பிட்டுள்ளனர். இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
