இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிருப்தியையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை எதிர்கொண்டு வரும் சூழலில் அந்த அணியின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.