BREAKING NEWS

Jul 28, 2013

பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் இணைக்க புதிய வேலைத் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களோடு இணையும் வகையில் பாடசாலைகளை அறிமுகப்படுத்த உயர் கல்வி அமைச்சு புதிய வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது. 

பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் இருக்கும் பாடசாலைகள் இத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. 

குறித்த பாடசாலைகளுக்கு பல்கலைக்கழகங்களில் காணப்படும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இத் திட்டத்தின் நோக்கம் என உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அப் பாடசாலைகளுக்கு புதிய கல்விமுறை மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவத்துள்ளது. 

இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளவுள்ள பாடசாலைகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு இணைந்து இச் செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளன. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &