BREAKING NEWS

Jul 18, 2013

ரமித் ரம்புக் வெல்லவிற்கு அபராதம்

மதுபோதையில் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி  வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

இதனால் அவரின் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் 50 சதவீத பணத்தொகையேஅபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

அத்துடன் ரமித் ரம்புக்வெல்ல கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.  ரமித் ரம்புக்வெல்ல, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத்தீவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்த இவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமையினால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &