நிறவெறிக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
உலகளாவிய ரீதியிலும், தென்னாபிரிக்காவிலும் மண்டேலாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் துரதிஷ்டவசமாக நோய்வாய்பட்டுள்ள நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மிக விரைவில் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் எனத் தெரிவித்து இன்றைய நாளில் பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மண்டேலாவின் 67 வருடகால பொதுச் சேவைகளை கௌரவிக்கும் நோக்கில் 67 நிமிடங்களுக்கு பல்வேறு தொண்டு நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட நெல்சன் மண்டேலா தினமும் இன்றாகும்.
மக்களின் உரிமைகள் தொடர்பில் போராட்டம் நடத்தி 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.