BREAKING NEWS

Jun 16, 2013

மாதுரு ஓயா காட்டுப் பகுதியில் திடீர் தீ விபத்து

மகா ஓயா, மாதுரு ஓயா காட்டுப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

நேற்று (15) மாலை தொடக்கம் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. 

கடும் காற்று மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக இத் தீப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &