BREAKING NEWS

Jun 29, 2013

பாகி. சிறையில் இந்திய கைதி மரணம்

லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த இந்திய கைதி ஜாகிர் மும்தாஜ்(50) என்பவர் நேற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர். 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்லை தாண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 

லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாகிர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கைதி சரப்ஜித் சிங் பாகிஸ்தானில் சககைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சர்ச்சை அடங்கி சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தியர் அங்கு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
An Indian prisoner died of a suspected heart attack in a hospital in this eastern Pakistani city on Thursday, official sources said.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &