BREAKING NEWS

Jun 29, 2013

வரி தகவல் திரட்ட சென்று வயிற்றை தடவியவர் கைது

வரிப்பணம் தொடர்பான தகவலை திரட்டுவதற்காக வீடுவீடாக சென்ற பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் வீடொன்றில் தனியாக இருந்த சிறுமியின் வயிற்றை தடவி அமுக்கிய சம்பவமொன்று கனேமுல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஊழியரை கனேமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பஹா பிரதேச சபையை சேர்ந்த ஊழியர் ஒருவர் வரிப்பணம் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக வீடுவீடாக சென்றுள்ளார்.

அதன்போது வீடொன்றில் 13 வயது சிறுமி மட்டுமே இருந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற குறித்த அதிகாரி சிறுமியை கட்டிப்பிடித்து வயிற்றை தடவி அமுக்கியுள்ளார். அவரது பிடியிலிருந்து விடுபட்ட சிறுமி கூக்குரலிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டதுடன் சந்தேகநபரும் ஓடிவிட்டார்.

இந்நிலையில், காரியாலயத்திற்கு வந்த குறித்த ஊழியர் நடந்தவற்றை பிரதேச சபையின் முக்கியஸ்தர் ஒருவருக்கு தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்பதற்காக இருவரும் குறித்த சிறுமியின் வீட்டுக்கு நேற்றுமாலையே சென்றுள்ளனர்.

எனினும், சிறுமியின் பெற்றோர் அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்தே, கனேமுல்ல பொலிஸார் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &