BREAKING NEWS

Jun 29, 2013

கைதட்டியே கின்னஸை முறியடித்த இளைஞர்!

லண்டன்: பொதுவாக மற்றவர்களை பாராட்டுவதற்கு கை தட்டுவது வழக்கம். ஆனால் அதிலும் சாதனை செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் இரு இளைஞர்கள்.

கடந்த 2003ம் ஆண்டு, ஒரு நிமிடத்திற்குள் அதிகமுறை கை தட்டியவராக கின்னஸில் இடம் பிடித்தவர் கெண்ட் பிரெஞ்ச் என்ற இளைஞர். ஆனால், தற்போது இவரது சாதனையையும் முறியடித்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். 

இவர் ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளைத் தட்டியுள்ளார். ஆச்சர்யம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமலேயே இவர் இந்தச் சாதனையை அரங்கேற்றி இருப்பது தான்.

லண்டனைச் சேர்ந்த பிரையன் பெட்னார்க் என்ற இளைஞர் சமீபத்தில் யூடியூப்-ல் தனது கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கென்ட் என்பவர் தான் 2003ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி, அதிகமுறை அதாவது 721 முறை கை தட்டியதற்காக கின்னஸில் இடம் பெற்றவர். ஆனால், தற்போது அவரை விட 81 முறை அதிகமாக கைதட்டியுள்ளாராம் பிரையன்.

பிரையன் பெட்னர்க் என்ற இந்த இளைஞர் விளையாட்டாகத் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பிறகு தான் அதன் அருமை தெரிந்துள்ளது. தற்போது, இவர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &